வேதாந்தப் பாடல்கள் கடமை

கடமை புரிவாரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
மடமை, சிறுமை, துன்பம் பொய்
வருத்தம், நோவு, மற்றிவை போல்;
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:07 pm)
பார்வை : 0


மேலே