தமிழ் கவிஞர்கள்
>>
மீரா (கவிஞர்)
>>
நிலா
நிலா
முத்தம் என்றதும் முயல்வே கத்தில்
ஓடவா பார்க்கிறாய்? ஒளியவா பார்க்கிறாய்?
கூடாது... முத்துக் குடையே! கொஞ்சிக்
கூடாது பிரியக் கூடாது! சற்றே
இரு!இரு! என்றன் இருவிழி யைப்பார்!
பருவத் தால்நான் படும்பாட் டைப்பார்!
உருவம் மெலிந்தே உள்ளேன்! என்னைக்
கொஞ்சம் கவனி, கொய்யாப் பழமே!
துயரை மறக்கத் துணைசெய்; வரவா?
சம்மதம் தானா? “சரி” சொல்! உன்னை
எட்டிப் பிடிக்கவா? இதயங் குளிரக்
கட்டிப் பிடிக்கவா? களிக்கவா நிலாவே?