பல்வகைப் பாடல்கள் காலனுக் குரைத்தல்

காலாஉனை நான்சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கிறேன் -- அட
(காலா)

சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் -- நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமையெண்ணித் துதிக்கிறேன்--ஆதி
மூலாவென்று கதறிய யானையைக் காக்கவே -- நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ? கெட்ட மூடனே -- அட

(காலா)

1.1

ஆலால முண்டவ னடிசர ணென்ற மார்க்கண்டன் --தன
தாவி கவரப்போய் நீபட்ட பாட்டினை யறிகுவேன் -- இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல் உன்னை விதிக்கிறேன் - ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் -- அட (காலா) (காலா)

2.1


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:15 pm)
பார்வை : 0


மேலே