இரு பூக்கள் கிளை மேலே

இரு பூக்கள் கிளை மேலே

ஒரு புயலோ மலை ஏலே

உயிர் ஆடும் திகிலாலே

என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே

(இரு பூக்கள்..)



கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே

தேடித் தெடித் தேய்ந்தேனே

மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே

கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

(கண்ணீரே..)



உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா

பென் நெஞ்சே சிறைதானா சரிதானா

பெண் நெஞ்சில் மோகமும் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு

பேராசைத் தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்

கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போதும்

நம் காதல் அது போல் மீறும்

கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போதும்

நம் காதல் அது போல் மீறும்

(தேடித்..)



கண்ணீரே



பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ

பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே

பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு

இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு

ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மௌன வார்த்தை சொல் சொல்

உன்னோட்டு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்

காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

உன்னோட்டு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்

காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

(கண்ணீரே..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:38 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே