தமிழ் கவிஞர்கள்
>>
ஈரோடு தமிழன்பன்
>>
கவின்குறு நூறு
கவின்குறு நூறு
காக்கையைக்
காட்டிக் கொண்டே
சோறு ஊட்டிக்
கொண்டிருந்த
பாட்டியிடம்
கேட்டான் கவின்
அந்த
காக்கா தன்னோட
குழந்தைக்கு
யாரைக் காட்டிச்
சோறூட்டும்!
-
பொம்மையிடம்
பேசிக் கொண்டிருக்கும்
கவின்
சொல்கிறான் பாட்டியிடம்
உஸ்….
குறுக்கே பேசாதே!
-
உடைந்த
பலூனிலிருந்த
வெளியே வந்த காற்று
ஏங்கியது
இனி எப்படி விளையாடுவேன்
குழந்தையோடு!