அண்டார்டிக்கா துப்பாக்கி

அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா..... நிஷா நிஷா
ஹே நிஷா.... நிஷா நிஷா

அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?

அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?

அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்!

அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!

அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!

தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி, என்னில்!

இருவிழிகளின் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி, கண்ணில்!

உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:08 pm)
பார்வை : 0


மேலே