யாரிவனோ? நான் ராஜாவாகப் போகிறேன்

யாரிவனோ? எந்தன் மௌனம் கலைத்தான்
யாரிவனோ? என்னுள் காதல் விதைத்தான்
யாரிவனோ? இன்னும் என்னென்ன செய்வான்
புரியாமல் தவித்தேன்!

முதற்பார்வைக் காதலை
இதயக் கூட்டில் தேக்கினேன்
அதன் பாரம் தாங்கியே
நகரா நாட்கள் போக்கினேன்

உனைக் காணும் போதுதான்
உயிரின் தேவை காண்கிறேன்!
உனை நீங்கும் போதுதான்
நினைவே தேவை என்கிறேன்!

யாரிவனோ? யாரிவனோ?
பகலினில் வந்தானே - எந்தன்
இமைகளிலே மயிலிறகால்
தொட்டுச் சென்றானே!

யாரிவனோ? யாரிவனோ?
இரவினில் வந்தானே - எந்தன்
விழிகளிலே கனவுகளை
நட்டுச் சென்றானே!

தெரியாமல் எனை தீண்டி
ஒரு போதை கொள்கின்றான்
தடுமாறும் ஒரு சாக்கில்
எனை முட்டிச் செல்கின்றான்

முறையில்லா கதையெல்லாம்
குறும்பாகச் சொல்கின்றான்
இரசித்தேனா முறைத்தேனா
என பார்த்துச் செல்கின்றான்

போலி வேடம் போடும் பெண்ணே
உந்தன் முகத்திரை உடைத்துவிடு
இந்த இரவும் கரையும் முன்னே
எந்தன் கையில் கிடைத்துவிடு

அலை போலே எழுகின்றேன்
அவன் காணும் நேரத்தில்
இலை போலே விழுகின்றேன்
முடிவில்லா ஆழத்தில்

அளவாக சிரித்தேனே
கண்ணாடி பிம்பத்தில்
அவன் போலே நடித்தேனே
அதில் வைக்கும் முத்தத்தில்

பிம்பம் கூட நொறுங்கிடும் பெண்ணே
உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே
நம்பவில்லை இதுவரை இதயம்,
நீயும் காதல் கிறக்கத்திலே!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:09 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே