நீ தந்த சுகமெல்லாம்

நீ தந்த சுகமெல்லாம் -
நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை
வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த பெருமூச்சில் கொண்டதில்லை
எங்கே மீண்டுமொரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டியாகு
தட்டாதே
தாய் சொல்லைக் கேள்
பத்து மாதம் என் வயிறுசுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:29 pm)
பார்வை : 0


மேலே