தமிழா

தமிழா
காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா
கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்
பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்


  • கவிஞர் : வைரமுத்து
  • நாள் : 2-May-14, 4:35 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே