உன் பிறந்த நாள்

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:40 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே