ஊர்வலம்

மயிலின் நடுக்கத்துக்குப்
போர்வை கொடுத்த பேகனே
எங்கே போய்த் தொலைந்தாய்?
வா

லட்சோப லட்சம் பச்சை மயில்கள்
வறுமை அடிமை வரதட்சணைக் கொடுமை
இவற்றில் நடுங்குகின்றன - என்றேன்
வேக வேகமாய்
எதிரே வந்த பேகன்
அவசர அவசரமாய்ப்
போர்வையை எடுத்துத்
தன்
முகத்தைப் போர்த்துக்கொண்டான்


கவிஞர் : மு. மேத்தா(2-Nov-11, 2:16 pm)
பார்வை : 133


பிரபல கவிஞர்கள்

மேலே