கதவைத் திற

கதவைத் திற காற்று வரட்டும்
சிறகை ஒடி
விசிறியின்
சிறகை ஒடி.
விசிறிக்குக் காற்று
மலடிக்குக் குழந்தை
கதவைத் திற காற்று வரட்டும்
உணவை ஒழி
உடலின்
உணவை ஒழி
உணவில் உயிர்
நீருள் நெருப்பு
கதவைத் திற காற்று வரட்டும்
சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
கதவைத் திற காற்று வரட்டும்.


கவிஞர் : சுந்தர ராமசாமி(2-Nov-11, 5:59 pm)
பார்வை : 133


பிரபல கவிஞர்கள்

மேலே