கலைஞர் தான் தமிழுக்கு காப்பு

தலைவர் கலைஞர் புரியும்
தமிழ்ப் பணிகளை...
ஒரே வார்த்தையில் சென்னால்-
ஆஹா!
அதற்கு மேல் செல்வதற்கு-
ஆகா!

இது போன்ற பணிகளை
இப்பெருமகன் இயற்ற இயற்ற-
பொங்கு தமிழின் புகழ் -இமயப்
பொருப் பிடிக்கும்;

இவனது பணி-
இல்லாது போயின்
பொருப் பிடிக்கும் தமிழுக்குத்
துருப்பிடிக்கும்!

கலைஞர் தான் -தமிழுக்குக்
காப்பு; அந்தக்
காப்புக்கு தந்தேனொரு
கை கூப்பு!


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 12:40 pm)
பார்வை : 100


மேலே