தமிழ் கவிஞர்கள்
>>
தேசிக விநாயகம் பிள்ளை
>>
ஆக்கம் வேண்டுமெனில்
ஆக்கம் வேண்டுமெனில்
ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
அடைய வேண்டுமெனில்
ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது
உழைக்க வேண்டுமப்பா
உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
உடுக்கும் ஆடைக்கும்
மண்ணில் அந்நியரை நம்பி
வாழ்தல் வாழ்வாமோ?
உண்ணும் உணவுக் கேங்காமல்
உடுக்கும் ஆடைக் கலையாமல்
பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
அண்ணல் காந்திவழி பற்றி
அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்.