கண்ணுக் கினியன கண்டு

கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
காட்டில் அலைய விட்டு
பண்ணிடும் பூசையாலே - தோழி
பயனொன்றில்லையடி
உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
உள்ளேயும் காண்பாயடி.


கவிஞர் : தேசிக விநாயகம் பிள்ளை(4-Jan-12, 6:10 pm)
பார்வை : 103


பிரபல கவிஞர்கள்

மேலே