வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!


கவிஞர் : தேசிக விநாயகம் பிள்ளை(4-Jan-12, 6:11 pm)
பார்வை : 132


மேலே