தமிழ் கவிஞர்கள்
>>
பா.விஜய்
>>
தீயின் திறப்புவிழா உன் புன்னகை
தீயின் திறப்புவிழா உன் புன்னகை
தீயின் திறப்புவிழா
உன் புன்னகை
நீ
வாசத்தை உற்பத்தி
செய்யும் நாணத்
தொழாற்சாலை
குனிந்து நகரும்
கோபுரம்
நிமிர்ந்த நிலவே
கண்ணுக்குத்
தெரியாத பூக்கள்
உனக்கு வாசமானது
கண்ணுக்கு தெரியும்
கனிகள் உனக்கு
வசீகரமானது
மலராயுதம் நீ
நீ முகத்தை துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டியிருந்தது
சில வானவில்கள்
அருவிகளை என்
கண்களுக்கு தந்து
விட்டு எங்கே நீ
குளிக்க சென்று
விட்டாய்