நெருப்பிற்கு ருசி உண்டு
நெருப்பிற்கு ருசி
உண்டு உன்
இதழ்களைக் கொடு
ருசிக்கிறேன்
ஃ கடல் உன்மார்பு
அதனால்தான்
கரையோரம்
தளும்புகிறது
ஃ லட்சக்கணக்கான
வீரர்களுக்கு முன்
ஒருவனாய்
உனக்கு முன் நான்
ஃஉன் ஆனவத்தை
விட அழகானது
உன்னிடம் எதுவும்
இல்லை
ஃ ஒர் அரங்கமே
கை தட்டியது போல்
இருந்து நீ இமைகளை தட்டியதும்
ஃ நீயும் நானும்
சேர்ந்தால் அது இயல்
இசை நாடகம் அல்ல
இதழ் இசை நாடகம்
ஃ இலக்கணம் மீராத
உன் இளமைக்கனம்
வாழ்க
ஃ காற்றும் காதலும்
சன்னல் வழி
வருகிறது கதவுவழி
சென்றுவிடுகிறது
ஃ இளமைப் படகே
உன்னால் கவிழ்ந்த
நதி நான்
ஃ முடிந்தால் வந்து
பார்த்து விட்டுப் போ
இறந்து கிடக்கும்
என் அமைதியை
ஃ கிளைகளை மூடும்
அவசரத்தில் கனிகளை
இலேசாய்
தெரியவிட்ட அப்பாவி
மரம் நீ
ஃ முன்
அறிவிப்பில்லாத
யுத்தங்களை உன்
முந்தானைகள்
செய்கின்றன
ஃ நீ உலக அதிசயம்
அல்ல உலக ரகசியம்
ஃ நீ பல்கலைக் கழகம்
அல்ல
கள்கலைக்கழகம்
ஃ காய்சல் அடிக்கிறது
ஒரு டீஷ்பூன் வெட்கம்
தா
ஃ உற்பத்தியான இடத்திற்கே திரும்பத்
திரும்ப வரும் நதி
காதல்தான்
ஃ உன் நெற்றியில்
முத்தங்களை
பயிரிட்டேன்
கண்ணங்கள்
வெட்கத்தை
அறுவடை
செய்கின்றன
ஃ மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழவகைகள்
உன்னிடம் மட்டுமே
உண்டு
ஃ எப்படியாவது இன்று
இரவு கண்டுபிடித்து
விட வேண்டும்
வெட்கம் உன்
உடம்பில்
ஆரம்பிக்கும் இடத்தை
ஃ இலேசான
இதயங்களில் தான்
கனமான காதல்
தோன்றுகிறது
ஃ நீ மேற்கின்
சிவப்பில் கிடைத்த
சிவப்பு
ஃ தராசுத் தட்டில் என்
ஆயிரம் இரவுக்
கண்ணீரை
வைத்தேன் நீ மறு
தட்டில் ஒரே ஒரு
புன்னகையை
வைத்தாய் சமம்
ஃ சொர்கத்தை ரசிக்கும்
திருட்டு வழி
உன் படுக்கை அறை
ஜன்னல்
ஃ நஞ்சும் காதலும்
தலைக்கு
ஏறிவிட்டால்
இறங்காது
ஃ நீ எனக்கு குளிர்கால
கூட்டத் தொடர்
ஃ ஒரு பெண்ணின்
இடையின் சுற்றளவும்
ஆனின் கைநீளமும்
ஒன்று
ஃ ஆள் கொல்லி
மிருகங்கள் காட்டில்
திரிகின்றன
உயிர் கொல்லி
மிருகங்கள்
தாவணியில்
திரிகின்றன
ஃஇரட்டை ஜடை
துப்பாக்கியே உன்
தோட்டாக்கள் என்ன
மல்லிகை
மொட்டுகளா
ஃ உடம்பை மறைக்க
உடை கண்டு
பிடித்தவனை விட
எதை எதை
மறைக்க வேண்டும்
என்று கண்டவனே
ரசனாவாதி