உடல் எழுத்து

அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈரழுந்த பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகை & மதுவை.
ஓட்டம் போல் நட.
ஒளதடம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்.


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 10:20 am)
பார்வை : 37


பிரபல கவிஞர்கள்

மேலே