நான் இயல்பு கவி !!!

நான் புதுமையானவன் அல்ல …
நான் பழமையானவன் அல்ல …
இளமையானவன் , இயல்பானவன்.
உனது விழி கூர்மையால்
செதுக்கபட்டவன் – உன் விழி
அசைவால் உயிர் பெற்றவன்.

எனது படைப்புகள் பருவம் அடைவதில்லை
உனது பார்வை படும் வரை…
எனது கண்ணின் நீர் துளிகள்
ஆயிரம் முடிவு பெறாத கவிதை சொல்கிறது
உன் பார்வைக்காக….

நீ சிரித்ததில் சிந்தியது முத்துகள்
தரையில் தேடுவது போல் நடித்தேன்
மீண்டும் அந்த முத்துகள்
உனது உதட்டில் ஜனிபதற்காக….

நான் உனக்கு வேண்டாம் – தெரியும்
கடவுள்களுக்கு பூசாரி தேவையில்லை
ஆனால் இந்த பூசாரிக்கு
நீ வேண்டும் … உன்னை பூஜி ப்பதற்காக….

நீ வேர் ஒருவற்கு உரிமையானவள் – தெரியும்
மறந்து விடாதே – என் கவிதைக்கும்,
என் சிரிப்பிற்கும் , என் அழுகைக்கும்
நீ உரித்தனாவள் – உரிமையானவள்.
உரிமையை இழந்து விடாதே…..

உன் இளமையின் ரகசியம் – தினமும்
உனது கண்ணாடி காட்டுகிறது – தவறு !
உனது இளமையின் ரகசியத்தை
நான் கூறுவேன் …. தெரிந்துகொள் …
எனது காத்திருப்புகளும், எனது
கவிதையின் ஏக்கமும், வார்ப்பும் தான்….

நான் புது கவி அல்ல
நான் பழமை கவி அல்ல
இளங் கவி
உன்னால் உலகத்தை உணரும்
இயல்பு கவி …..
-பாரதி கண்ணன்
First published in my private blog

எழுதியவர் : பாரதி கண்ணன் (8-Jan-13, 9:59 pm)
சேர்த்தது : பாரதி கண்ணன்
பார்வை : 93

மேலே