உழவின்றி உலகில்லை (பொங்கல் விழா போட்டிக்கவிதை)

சோறுடைத்த சோழ நாடு
சோகத்திலே கிடக்குது!
கல்லணையும்,காவிரியும்
காய்ந்து போய்த்தான் கிடக்குது!
நாகரீகம் தேடி மக்கள்
ந(ர)கரம் நோக்கி நகர்ந்துதான் ,
வானத்தில் ஏறி நிதம்
வைகுண்டம் போறாங்க!
மனைக்கட்டு வியாபாரந்தான்
கொடிகட்டிப் பறக்குது!
வயலெல்லாம் வீடாக
மாறித்தான் கிடக்குது!
உழவரெல்லாம் வேலை தேடி
ஊர் ஊராப் போறாங்க!
உழவுத் தொழில் செய்யலீன்னா
உணவுக் கென்ன செய்வீங்க?
மாடிமேல மாடி கட்டி
மன்னவனா வாழ்ந்தாலும்,
அடிவயிறு பசிக்கும்போது
அதுக்கு என்ன செய்வீங்க?
உழவுக்கு மிஞ்சிய தொழில்
உலகத்திலே இல்லீங்க!
உழவு செய்ய வில்லையின்னா
உலகமே இல்லீங்க!