\'ஐ லவ் யூ\' கருமம்

முன்னே செல்பவன் அடிக்கடி திரும்ப
பதினாறு வயது அஞ்சலை பரிதவித்தாள்
அவன் இவள் ஊர்தான் ஆனாலும்
யாருமற்ற பாதையில் அச்சமாயுள்ளது.
கையைப் பிடித்து இழுத்து விடுவானோ
அல்லது அந்த கருமத்தை சொல்லிடுவானோ?
பயத்தில் கண் மூடியவள்
கண் திறந்த போது அருகில்
வந்தவன் அஞ்சலையிடம் கேட்டான்
'ஏன் புள்ள, நீ பத்தாவது பெயிலாமே
சரியா படிக்கலையா? '
இதற்கு இவன் அந்த 'ஐ லவ் யூ'
கருமத்தையே சொல்லி இருக்கலாம்.

எழுதியவர் : சாய்ஸ்ரீ (8-Jan-13, 10:33 pm)
சேர்த்தது : saisri2912
பார்வை : 150

மேலே