நன்றி ! அம்மா ! ஐயா !
பசி என் காதை அடைக்கும் போது,
உணைவை தவிர வேறு நினைவில்லாதிருந்த,
எனக்கு அப்பசியையும் மறக்க,
மருந்து விற்கும் அரசுக்கு நன்றி.
என் வயலின் தாகம் தீர்க்க,
தண்ணீர் இல்லையென்ற,
குறையை மறக்க, எனக்கு,
தண்ணீர் விற்கும் அரசுக்கு நன்றி.
மான்யம் என்ற மாய வலை விரித்து,
மீன் குட்டிகளான எங்களுக்கு,
வீதிதோறும் தண்ணீர் தொட்டி கட்டி
போதையில், நீந்த விட்ட அரசுக்கு நன்றி.
வீட்டிற்கு போனால் மகளிர் தொல்லை,
அம்மா, மனைவி, மகள் என்று நச்சரிப்பு,
திருத்திவிடலாம் என்ற நம்பிக்கை,
திருந்த விடாத தமிழக அரசுக்கு நன்றி.