நீயே நானாயிருக்கிறாய்
எப்போது
சோகம் வந்தாலும்
உன் பெயர் சொல்லியே
உற்சாகமடைகிறேன்...
எவ்வளவு
தடைகள் வந்தாலும்
உன்னை நினைத்தே
உத்வேகமடைகிறேன் ...
என்னையே
பிடிக்காதபோதும்
எதையாவது சாதிக்க வேண்டும் என்று
உன்னையே சார்ந்திருக்கிறேன் ...
தன்நம்பிக்கையே ..
என்னோடு எப்போதும்
நீயே நானயிருக்கிறாய் ..