...........மயிலே...........

நீ உதிர்த்துப்போன ஒரு இறகு,
பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள் !
வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் !
என்னிடம் என்னிடம் புருவமுயர்த்தி வினவுகிறாள்,
அப்பா !!
மயில் ஏன் குட்டி போடவில்லை? என்று,
நான் சொல்கிறேன் !
மயிலைப் பார்த்தே கேட்டுவிடலாமென்று !
உடனே எப்போது என்கிறாள் !!
சொல் மயிலே !!
எங்கு வரட்டும் பதிலுக்கு என் சின்ன மயிலுடன் ?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Jan-13, 7:08 pm)
பார்வை : 81

மேலே