காதலை வர்ணிக்க....

காதலை வர்ணிக்க என்னி
வரிகளை தேடினேன்.....
மனதை பறக்க வைக்கும் சிறகாய்
இன்பமானத் தொல்லைத் தரும் மழையாய்
இதமான இன்பம் தரும் தென்றலாய்
புது அழகோடு மலரும் மொட்டாய்
மழலையின் கபடற்ற புன்னகையாய்
அளக்க முடியாத ஆளமான கடலாய்
எந்த சுமையையும் தாங்கும் பூமியாய்
இதுதான் காதல் என்றால் கூட
அது மிகையாகாது.........
கடைசியாய் மனம் சொல்லிற்று
இது தான் காதல் என்று
யாரும் வர்ணம் தீட்டி விட
முடியாததிணாலோ
என்னவோ - காதல்
இன்னும் உயிரோடு
இருக்கிறது புவியில்....