எல்லாம் பயமயம்
என்னவளே!
நீயும் உன் அப்பாவும்
நிலவும் சூரியனுமா?
அவர் இருந்தால் நீ
மறைந்து விடுகிறாய் !!!
கண்ணே !
நீயும் உன் அம்மாவும்
இரும்பும் காந்தமுமா?
என் வருகையை பார்த்தாலே
உன்னை தன்னுள் ஈர்த்துக் கொள்கிறார்கள்!!!
அன்பே !
நீயும் உன் அண்ணனும்
எலியும் பூனையுமா?
தனியாக இருந்தால் சிரிக்கிறாய்
சேர்ந்திருந்தால் முறைக்கிறாய்!!!
அழகே !
நீயும் உன் தங்கையும்
முள்ளும் மலருமா ?
உன்னிடம் பேசும் போது
தங்கை முள்ளாய் குத்துகிறாள்!!!
ஆருயிரே!
நீயும் உன் தம்பியும்
பஞ்சும் நெருப்புமா?
என்னை கண்டாலே
உன் மேல் நெருப்பாய் பாய்கிறானே!!!