மாமியார்... மருமகள்...
மஞ்சள் பூசின முகம் ஏங்கே?
வாடாத பூ ஏங்கே?
அழியாத சிரிப்பு ஏங்கே?
ஓயாத பேச்சு ஏங்கே?
எல்லாம் மற்ந்துடுச்சு
எங்கோ போய்ருச்சு
நான் மறுவீடு போனபோது
மாமியார் முகம் சுழிக்க
நாத்தனார் முனுமுனுக்க
மாமனார் கடுகடுக்க
கொளுந்தனார் கொந்தலிக்க
கணவன் தலையசைக்க
நான் உள்ளே கதவடைக்க
மாதங்கள் ஒடிடுச்சு
மலடி பட்டம் நீங்கிடுச்சு
பிள்ளையும் பெத்தாச்சு
ஊமையாய்
செல்கிறது வாழ்க்கை
ஆண்டுகள் முன்னேற
நானும் மாமியார் ஆக
எனக்கும் மருமகள் வர
வந்தவள் அம்மா என்றலைக்க
பொங்கிவந்த கண்ணீர அடக்கி
அவள நெஞ்சோட அனச்சுகிட்டேன்.