தவறு செய்யா தண்டனையா....!!!

காற்றுக்கு வேலி...
போட்டாள்...
கவிதை மட்டும்...
வடித்து வந்தாள்...!!!

காலம் செய்த...
கோலத்தினால்...
தன்னைத் தானே...
பறி கொடுத்தாள்...!!!

தேவதை போல்...
வாழ்ந்தவள்...
இன்று தேவையின்றி...
சிக்கித் தவிக்கின்றாளே...!!!

கல்லெறி படுகின்றது...
காரணம் இன்றி...
வலிக்கின்றதே...!!!

யாரிடம்...
சொல்லித்தான் ...
அழுது முடிப்பாள் ...
அவள்...
வேதனை தான்...
யாரறிவார்...!!!

அணைக்க வந்தவரும்...
கோடரிப்பாம்புகளாக...
மாறிவிட...
அவள் விதியோ..
தட்டுத் தடுமாறுகின்றதே ...!!!

பாவத்தின் கண்கள்...
பார்த்தறியா...
அவள் உள்ளம்...
பதறுகின்றது...
பாவ மூட்டைகள்..
வீசப் பட்டபொழுது...!!!

காலத்தின் கைகளில்....
அவளைக் ....
கொடுத்துவிட்டு ...
கடந்து செல்கின்றாள் ...
கதறல்களோடு...
அவள் கண்ணீரின்...
கதைகளோடு...!!!

எழுதியவர் : கவிஞர் இராஜேந்திரகுமார் (27-Jan-13, 4:26 pm)
சேர்த்தது : rajendrakumar
பார்வை : 146

மேலே