இயற்கை

இசை,
காற்றுக்கு மூங்கிலின்
மீதுள்ள காதல்!
அலை,
கடலுக்கு கரையின்
மீதுள்ள காதல்!
இரவு,
சூரியனுக்கு நிலவின்
மீதுள்ள காதல்!
தேன்,
பூவிற்கு வண்டின்
மீதுள்ள காதல்!
மழை,
விண்ணிற்கு மண்ணின்
மீதுள்ள காதல்!
இந்த அழகிய அதிசயங்களை
ரசிக வாய்த்த என் உணர்வு
மனிதனுக்கு இயற்கையின்
மீதுள்ள தீராத காதல்..........

எழுதியவர் : bargavi (2-Feb-13, 3:30 pm)
சேர்த்தது : bargavijoy
பார்வை : 116

மேலே