திராவக வீச்சில் மறைந்த ஏன் தங்கை விநோதினிக்காக ...
சிப்பிக்குள் இருக்கும் முத்தை போல ஒரு ஜென்மம் எடுத்து நீ பிறக்க ...
பிறப்பிற்கு ஏற்றார் போல் படிப்படியாய் நீ வளர...
வியப்பிற்கு உற்ற வண்ணம் தேவதையாய் நீ ஜொலிக்க
சிறப்பிற்கு குறைவில்லாது சிந்தனையில் நீ விளங்க ..
பாவி பய உலகத்துல யார் கண்ணோ... உன்மேல பட்டதடி...
காதலென்னும் கோட்பாடு தெரியாத கேடுகேட்டவனால் உன்முகம் கருகியதடி ..
பலநாளும் போராடி பயனில்லை என்ற காரணத்தால் பரலோகம் போனாயடி..
இழிவான காரியங்கள் செய்யும் இரக்கமற்ற புத்தி மான்களே ..
இறந்த இந்த உயிருக்கு விலையென்ன ....
இடுகாட்டில் சாம்பலை கண்டு அழும் இவள் பெற்றோருக்கு மதிப்பென்ன....
மறு ஜென்மம் என்றிருந்தால் உன் சகோதரனாக நான் பிறக்க வேணுமடி..