சரணடைந்தேன்

பாத்துப் பாத்து படைத்து வைத்த
பரம்பொருளே - உன்
பாதம் பற்றி சரணடைந்தேன்
திருவருளே

என்ன வேண்டும்? எனக்கு
என்ன வேண்டும்? என்று
நீ கணித்தாய் - நான்
பிறக்கும் முன்னே
படைத்து வைத்து
அகமகிழ்ந்தாய்
அனுபவிக்க உடலும் உயிரும்
எனக்கு தந்தாய் - நான்
பகுத்தறிந்து முன்னேற
பாதையும் விரித்தாய்.
பாதையிலே பயணிக்க
துணையாய் வந்தாய் - என்
பாவங்களை மன்னித்து
தாயாய் நின்றாய்.
உள்ளிருந்து எங்குமெனை
நடத்தி வந்தாய் - என்
பாதை நிறைந்திங்கு
வெளிச்சமும் ஆனாய்.
தடுமாறி வீழ்கையில்
ஊன்றுகோல் ஆனாய் - நான்
திசைமாறி போகையில்
நல் மாலுமி ஆனாய்.
கண்டிப்பதில் தகப்பனாய்
அணைக்கையில் தாயாய்
ஆதரவில் உடன்பிறப்பாய்
உயிர்கொடுக்கும் உயர் நட்பாய்
இப்படி எல்லாமுமாய்
இருந்து
பாத்துப் பாத்து படைத்து வைத்த
பரம்பொருளே - உன்
பாதம் பற்றி சரணடைந்தேன்
திருவருளே

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (20-Nov-24, 7:40 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : saranadainthen
பார்வை : 68

மேலே