கவிதை என் பார்வையில்
கவிதை என் பார்வையில்...
ஒவ்வொரு வார்த்தைக்கும்
தேடி அலைந்து முட்டி மோதி
உருவாகி வருவதல்ல கவிதை என்பது
மனதின் ஊற்றாய் ஒடும் அருவியாய்
இயல்பாய் வந்து ஜனிப்பதே கவிதை...
எல்லா கவிதையும் எழுதுவோர் பார்வையில் ஒரு அர்த்தமும்
வாசிபோர் பார்வையில் ஒரு அர்த்தமும்
கொண்டே முடிகிறது கவிதைகள்.
எழுதுகோல் வைத்து
காகிதத்தில் எழுதாமல் போனாலும்
பார்வையில் படும் எதோ அழகு ஒன்று
தூவி விட்டு செல்கிறது
எத்தனையோ கவிதைகளை...
எழுத மறந்த கவிதைகளே
ஏராளம் ...
எனைபோன்ற கத்துகுட்டி கவிஞனுக்கு
இயல்பாய் தோன்றும் கவிதை
எழுதாமல் போன பின்பு
எத்தனை முறை யோசித்தும்
திரும்ப அமைவதில்லை
கவிதைகளின் வார்த்தை கோர்வை...
யாரோ எழுதிய கவிதை படிக்க
அதன் சாரலாய் ...
நமக்கும் தோன்றிய கவிதைகள் தான்
படைக்கின்ற கவிதைகள் சிலவும்...
எல்லா கவிதையும் சபை
எற வாய்ப்பில்லை...
எல்லா கவிஞனும்....