கவிதையின் கவிதையே ..

சோக சுவடுகளை
உடைத்து எரிந்து
காகிதத்தில் விரியும்
பூக்களா நீ ..

உன்னை எப்படி
வர்ணிப்பது என்பது என்று
எனக்கு தெரிய வில்லை
வார்த்தைகள்
அனைத்தும் நீயே ..

உன்னிடம் காதலை
சொன்னால் அது
'காவியம்' ஆகிவிடும் ..

வாழ்கையின் சோகத்தை
சொன்னால் 'வரலாறு"
ஆகிவிடும்..

இப்படி மற்றவர்களின்
எண்ணங்களை
பிரதிபலிக்க செய்யும்
உன்னை வாழ்த்த
வானத்தின் நட்சத்திரம்
அனைத்தும் கூடி நிற்கட்டும்..

எழுதியவர் : குகன் (15-Nov-10, 9:44 pm)
சேர்த்தது : gugan
பார்வை : 446

மேலே