ஓர் நாள் வரும்!
அந்த ஓர் நாள்!
தென்னை யோலை வெட்டி - அங்கோர்
அழகுக் குடுசை கட்டி
எருது ஏர் பூட்டி - நித்தம்
மண்ணை யுழவு செய்தோம்
பூதங்க ளதைக் காக்க - அதைப்
பேணித் தவம்பு ரிந்து
தன்னை யுணர்ந்த வனாய் - ஆங்கே
திண்ணம மர்ந்த வனாம்
அமர்ந்தவ னவ்வண் ணமெ - அவர்களை
போதி களென் றார்களே
அறியாமை யிருளில் மூழ்கி - பலவராய்
பேதை களுமிருந் தார்களே
கல்லை மண்ணாக்கி - அந்த
மண்ணைப் பணமாக்கி
கல்லைக் கடவுளாக்கி - இந்தக்
கடவுளைக் காசாக்கி
மன்னைக் கணவாக்கி - அதற்கு
மாநுடத்தை யுணவாக்கி
குப்பைக் கூடாக்கி - இதற்கோர்
குவளைப் பூச்சூடி
தன்னை மறையாக்கி - தன்
னுடம்பைப் பாழாக்கி
உன்னைப் பன்மையாக்கி - பின்
னுடமைப் பலதாக்கி
இறைச்சி யுணவாக்கி - பின்னர்
பிணி மறபாக்கி
பூமியைக் கரியாக்கி - காக்கு
மாகாயங் குருடாக்கி
அண்டம் நமைக்காக்க - நாம்
அகண்டத்தைக் கூறுபோட
மாயைதான் மறையுமோ - மாசுதான்
ஆகாயம்விட்டுப் போகுமோ
ஒளி எழும்புமா - சீவன்
வலி யுறுமோ
ஓர்நாள் வருமோ - வாஞ்சையும்
வஞ்சமும் நீங்குமோ
ஓர்நாள் வருமோ - யாவின்
புறுங் காலந்தங்குமோ
மங்கி மதியிழந்து - அண்டி
வாழுமற்பநிலை மாறுமோ
இந்தநிலை மாறுமடா - அகரம்
விழுங்கியத் தமிழனடா
பசுமைப்புரட்சி ஓங்குமடா - ஆமிந்தப்
பச்சைத்தமிழ னுறுதியடா
சிரஞ்சிவந்தத் தமிழனடா - சினந்
தவிர்ந்திதைச் செதுக்கினேனடா
யாவுணர்ந்தும் வாழ்வோமடா - மடமை
பேதமையறியாமை இல்லாமை - பல'யாமை'யன்று
இறந்த காலமடா
ஓர் நாள் வரும்!