வேடிக்கை பார்ப்போம்.
சாலையில் சிதறி
சின்னா பின்னமாகக்
கிடப்பவை என்ன
மடக்கிய பைகளா?
மாலையில் வீட்டிற்கு
வந்தவர் எல்லாம்
நொந்து வீழ்ந்தனர்.
மனமகிழ் நகரில்
பிணங்களின் குவியலாய்
கைகள் கால்கள்
வெந்து அவியலாய்
சந்து பொந்தெலாம்
பந்தாய் சுருண்டு
கொந்திய கறியாய்
கொடூரக் காட்சி.
தொண்டு செய்கிறோம்
என்ற பெயரிலே
குண்டு கலாச்சாரம்
கொண்டு வந்தனர்
இரண்டு நாட்கள் முன்
தகவல் கிடைத்தும்
காவல் துறையென்ன
நண்டா பிடித்தது?
“மோடி” வித்தைகள்
காட்டியதைப் போல்
ஓடி விளையாட்டில்
ஒளியும் நால்வரை
ஒழித்துக் கட்டி
பழியைப் போடும்.
போக்கற்ற நாமும்
பொறிகடலை மென்று
காட்சியை மாற்றி
வேடிக்கை பார்ப்போம்.

