சைக்கிள் வாங்க !?
விக்கி தனது அம்மாவிடம் பொங்கலுக்கு ஒரு சைக்கிள் கேட்டான்.
"நீ இன்னும் வளர வேண்டும்"என்று சொல்லி விட்டாள் அம்மா.
எனவே விக்கி சிவனுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
"அன்புள்ள சிவா, நான் மிகவும் நல்ல ரொம்ப நல்ல பையன்' எனவே எனக்கு ஒரு சைக்கிள் கொடுக்கவும் ..."
இதில் திருப்தி ஏற்படாமல் விக்கி அதைக் கிழித்துப் போட்டு விட்டு மீண்டும் எழுதினான்.
"அன்புள்ள சிவா , நான் அவ்வப்போது கொஞ்சம் தப்பு பண்ணி இருக்கிறேன். ஆனால் நான் நல்ல பையன் தான் ; எனவே எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்"
இதிலும் திருப்தி ஏற்படாமல் மீண்டும் விக்கிஅதைக் கிழித்துப் போட்டு விட்டான்.
அப்போது வீட்டில் முருகனின் பொம்மை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் போய் துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து பரண் மீது வைத்து விட்டு வந்து எழுதினான்:
"அன்புள்ள சிவா, நீ உன் மகனை உயிரோடு பார்க்கவேண்டுமென்றால் உடனே எனக்கு சைக்கிள் வாங்கி அனுப்பி வைக்கவும்"