நிஜங்களைதேடுகிறேன் ஓர் பொய்யான பயணத்தில்

????????????????????????????????????????!????????????????.....!!!
ஆயிரம் கேள்விக்
குறிகள்!
எல்லாம் வினாக்கள்!
பொய்கள் கூட
பொய்கள்!
நீதி பதிகள் உருவாக்கப்பட்ட
பொம்மைகள்!
நிரபராதிகள்
கருவறுக்கப்பட்ட
உண்மைகள்!
எதிலும் நிஜமில்லை!
மதப்புத்தகங்கள்
மாலை நேரக்
கற்பனைகள்!
மனிதர்கள்
கற்பனையின்
காகிதங்கள்!
மொழிகள் கூட
கற்பனைகள்!
வலிகளுக்கான உண்மை மொழிகள்
எங்குமில்லை!
உயி ரெழுத்துகள்
உயிரில்லாதவை!
மெய் யெழுத்துகள்
பொய் யானவை!
இலக்கணம் மொழியின்
முகமுடி!
உணர்வுகள் வலியின்
முகமூடி!
எதுவும் இறுதியாகும்
நிஜங்கள்!
நிஜங்கள்தொடக்கத்தின்
பொய்கள்!
குறைகள் புவியின்
பள்ளங்கள்!
நிறைகள் பள்ளத்தின்
மேடுகள்!
காலங்கள் காற்றின்
வடிவங்கள!
கடிகாரங்கள்
வடிவத்தின்
கற்பனைகள்!
படகுகள் பாட்டனின்
வழிமுறைகள்!
அலைகள்
வழிமுறையின்
முன்னோடிகள்!
தரைகள் தண்டனை
சுமக்கும்
கல்லறைகள்!
கரைகள் கரைத்து
முடித்த சாம்பல்கள்!
கருணைகள்
கண்ணீரின் பிம்பங்கள்!
கண்ணீர்கள்
உடைந்து விழும்
கண்ணாடிகள்!
எல்லாமே எங்கேயோ
செல்லும்
எல்லையில்லா
பயணிகள்!
எல்லாமே பாவத்தை
சுமந்து போகும்
எதுவுமில்லா
பயணங்கள்!
பாவங்கள் கூட
தண்டிக்க ஆளில்லாமல்
போகும்
அனாதைகள்!
எதிலும் நிஜமில்லை
எல்லாம்
பொய்களின் பொய்கள்!

எழுதியவர் : ருத்ரா (26-Feb-13, 7:30 pm)
பார்வை : 248

மேலே