காதலும்......... மூன்றெழுத்தும்............

காதல்...
என்று நான் கூற
காமம் ...
என்று நீ கூறினாய்
கல்வி ..
அவசியம் என்றோம் இருவரும்
பிரிவு...........
நம் இருவருக்குள்
மணம்..........
ஆன பின்னும்
மனம் ..............
நினைக்கின்றது
காதலி.....
உனைக் காண்கின்றேன்
பார்வை ............
போனபிறகும்
தோல்வி .........
காதலில் நான் அடைந்திருந்தாலும்
நினைவு ...........
அலைகள் ஓயவில்லை
கவிதை ...........
எழுதிய அந்த ஞாபகம்............
தாத்தா...........
என்று என் பேரன் அழைத்தாலும்
காலம்..........
பலக் கடந்து தான் போனாலும்
காட்சி............
மாறாது என்னுள்
காலன் வரும் வரை........................

எழுதியவர் : munaivar (27-Feb-13, 7:47 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 188

மேலே