உன் நிழல் நான்...
உன்னருகில் இல்லாவிட்டால் என்ன அன்பே...!
உன் நிழலாய் நான் இருக்கிறேன்...
நீ செல்லும் இடமெல்லாம்...
தொடர்ந்து வருகிறேன்...
அன்பானவர்களின் நெருக்கம் உணர்ச்சிகளில்லை...
உணர்வுகளில் தெரியும்...
இந்த நொடி என் நிழல் பார்த்து...
உன் நெருக்கம் உணர்கிறேன்...
நீயும் உன் நிழலைப் பார்...
உன்னருகில் நானிருப்பேன்...
நீ இருளில் தனிமையாய் இருந்தால்...
உன் வெட்கம் உணர்ந்து...
உன்னுள்ளே நானிருப்பேன்...!