நீதானே..
இன்று வார்த்தைகளால்
கொல்லும் நீ தானே
உன் வார்த்தைகளால் எனை
கொள்ளை கொண்டு போனவன்
கண்ணீர் சிந்த முன்னரே
சிரிப்பின் அழகை
சிந்தையில் வைத்த நீதானே
அரும்பும் சிறு புன்னகையை
சிதறடித்து போகின்றாய்
ஆறென்ன அறுபது மணிநேரம் ஆனாலும்
என் பேச்சில் திளைத்த நீதானே
ஒரே மணிநேரத்தில்
களைத்து போகிறாய் எனை
திணற வைத்து கொல்கின்றாய்
வாழ்வின் அழகை
சொல்லி
நீள
கனவுகள் தந்து விட்டு
வாழ்வின் முடிவுகள் மட்டுமே
நனவாக
நொறுக்கி விட்டு போகின்றாய்
எனை.....