ஆறுதல்
அதிகாலை குளிர் காற்று
சிட்டு குருவிகளின் கீச்சுக்குரல்
சேவல் கோழியின் கூப்பாடு
பால் குடிக்க விளையும்
கன்ருவின் கதறல்
வாசல் தெளித்து கோலமிடும் மங்கையர்கள்
சாணி போட்டு மெழுகிய வீட்டின் வாசம்
அந்த கிராமத்து வீடுகளில் உள்ள பாசம்
இவையனைத்தும் அனுபவிக்க முடியாத
அப்பர்ட்மெண்ட் வாழ்கையில்
ஒரே ஆறுதல்
அடுத்த பிளாட்டில் குடியிருக்கும்
அவள் மட்டும் தான்