விழிகளில் பிறக்குதே நெருப்பு…..

விழிகளில் பிறக்குதே நெருப்பு…..
***************************************
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்கிற முகமூடியைக் காட்டி ‘இறையாண்மை மிக்க நாடு’ என்கிற முழக்கத்தை வைத்து ஐ.நா.வில் கழைக்கூத்தாடுகிறது இலங்கை அரசு.
இது போன்ற எந்த ஒரு வியூக முக்கியத்துவமும் தமிழர்களுக்கு இல்லை.தனக்கென பேசுவதற்கு ஒருநாடும் இல்லாத கையறு நிலையில் தமிழர்கள் உள்ளனர்.
வாட்டிகன் நகர் எனப்படிகிற ஹோலி சீ நாட்டின் மொத்த மக்களின் தொகை வெறும் 832 பேர்மட்டும் தான்.அவ்வாறே, லீக்டன்ஸ்டைன் எனும் நாட்டின் மக்கள் தொகை 35ஆயிரம் பேர் மட்டும் தான்.இந்தநாடுகளுக்கு இருக்கும் முக்கியத்துவமும் கூட ஒன்பது கோடி தமிழர்களுக்கு இல்லை.ஏனெனில் தமிழர்களுக்கென்று ஒரு நாடும் இல்லை(இந்தியா எதிரியின் ஆதரவுநாடு) அதனால் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ள சிங்களர்களால் தமிழகளைக் கொன்று குவிக்கவும் அடக்கி ஒடுக்கவும் முடிகிறது.
ஈவு இரக்கமின்றி யூதர்களைக் கொன்ற கொடுங்கோலன் இட்லரின் வாரிசுசான வெத்துப்பய…10 தில் 1 குறைந்த ராஜபக்சே மடப்பய…மார்தட்டிக் கொள்ளட்டும்.
மனிதனின் மாண்போடு அமர்ந்துள்ள ஐ.நா.தலைவர்கள் அரிதாரம் பூசி நிற்கும் ராஜபக்சேவின் முகமூடியை கிழிக்கட்டும்.
அதிலும், அவன் தப்பிவிட்டால்…
முதலாம் இராஜேந்திரன் பிறந்து விட்டான்…
இரு… இரு…
உனக்கு மட்டுமல்ல உன் இனத்திற்கே சமாதிகட்ட…!

எழுதியவர் : Anbuselvan (11-Mar-13, 1:30 am)
பார்வை : 171

சிறந்த கட்டுரைகள்

மேலே