மறுபடியும் மலரும்

காதல் என்மீது உள்ளதால்
டேய் என்றாய்-அதில்
பாசம் இருந்தது

கல்யாணம் உனக்கு ஆனபின்
டேய் என்கிறாய் -இங்கு
பகையல்லவா இருக்கிறது

நிஜத்தில் நீ
என்னில் இணைந்திருந்தால்
விஷமல்லவா-என்
உதிரத்தில் கலந்திருக்கும்

காரணம் அறிந்துதானோ
காலம் கல்யாண உறவை
உண்மை காதலில் வைத்து
என்னை காத்தது

உன் பொய்யான உடல்
போன பின்பு
மெய்யான ஜீவன் என்னை சேரும்
மறுஜென்மத்தில் மறுபடியும் மலரும்

எழுதியவர் : (12-Mar-13, 5:27 pm)
சேர்த்தது : Athiveeran
Tanglish : MARUPADIYUM malarum
பார்வை : 105

மேலே