குழந்தை
கண்ணனின் கண்ணில் கண்ணீர் தரை தரையாக வந்தது அவன் இதுவரை அழுததில்லை அனல் இன்று அவனையும் மீறி கண்ணீர் வந்தது காரணம் ரத்த பாசம் அவன் தங்கை தமிழரசிஇன் உயிரில்லாத உடல் மரச்சேரில் கிடத்தப்பட்டு இருந்தது அவளின் அம்மா நெஞ்சில் அடித்து கொண்டு அழுததை கண்ணனால் பார்க்க முடியவில்லை தமிழரசி மிகவும் கெட்டிக்காரி 12 வயது பெண் ஆறாம் வகுப்பு படித்து வந்தாள் 5ம் வகுப்பு வரை உள்ளூரில் படித்தாள் தமிழரசி அவளின் அப்பா பணம் பற்றாக்குறை காரணமாக அவளை வெளியூரில் படிக்க வைத்தார் வெளியூர் படிப்பு அவளின் உயிரை பறித்து விட்டது தமிழரசியுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் இவளின் அப்பாவோ சாதாரண விவசாயி படிப்பறிவு இல்லாதவர் அனால் நல்ல யோசனைகாரர் 6 பிள்ளைகளை பெற்று படிக்க வைப்பது என்றால் சும்மாவா அனைவரையும் படிக்க வைத்து இருந்ததால் பணம் பற்றாக்குறை இதனால் தமிழரசியை வெளியூரில் விடுதியில் தங்கி படிக்க வைத்தார் சிறுவயதில் தனித்து விடப்பட்ட அவள் தாய் தந்தை பாசம் கிடைக்காமல் தவித்திருக்கிறாள் அவளின் வேதனை யாருக்கு புரிந்திருக்கப்போகிறது அவளின் தாய் தந்தைக்கு வழக்கம் போல் தனது வயல் வேலையையும் காட்டு வேலையும் மட்டுமே கவனிக்க நேரம் சரியாக இருந்திருக்கும் 2 மாதத்திற்கு பிறகு ஒருநாள் உடல்நிலை சரிஇல்லாமல் இருந்தது அவளை வீட்டிருக்கு அனுப்பி வைத்தனர் விட்டிருக்குவந்த பிறகுதான் அவாளின் நிலை புரிந்தது இரண்டு நாளில் சரியாகி விடும் என்று நினைத்தனர் (படிக்காதவர்கள் ) மூன்றாவது நாளில் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொது இறந்து விட்டாள் அவள் இறந்ததுக்கு காரணம் அவளுக்கு வந்த காய்ச்சல் இல்லை பெற்றோரின் கவனிப்பு இல்லாததே முக்கிய காரணம் தயவு செய்து உங்கள் குழந்தைகளையும் சிறுவயதில் வெளியூரில் தங்கி படிக்க வைக்க அனுமதிகாதிர்கள் அவர்கள் பெற்றோரின் பாசம் அவசியம் தேவை சிந்தித்து செயல்படுங்கள்
இப்படிக்கு
தங்கையை இழந்தவன்