நான் தேடும்…

நான் தேடும்…
============
பிறரது குற்றங்களை கவனிக்காதே…
நீ எவ்வித குற்றமும் செய்யாமல் நடந்து கொள்…!
இது வள்ளலார் கூற்று….!
கள்ளமில்லாத ,களங்கமில்லாத நல்ல
உள்ளங்களை பெற்றாலன்றி…
உலகினின்று நன்மை செய்யக் கூடிய
எந்த அறிவையும் பெறமுடியாது…
இது காந்தியடிகள் சொன்னது…!
இந்த மேதைகளின் கூற்றுப்படி வாழ்ந்து பார்க்கலாம் என்றால்…இங்கே
குறைகளை களைவதே சேவையாகிறது…
குற்றங்களை தடுப்பதே வேலையாகிறது….
மனித மனங்கள் அத்தனையும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நேசமாகிறது… நெருங்கி வரும் மனிதனிடம் தரம் கண்டு…. தனக்கு மேலானால் பகைமை கொள்கிறது, கீழானால் அடிமை கொள்கிறது…
வாழ்வில் பொருளாதார மேம்பாடே…
மனிதனை உயர்ந்த இடத்தில் இருப்பது ,என பறைசாற்றிக் கொள்கிறது.
உலகம் போதிக்கும் கலாசாரத்தால் மனம் நெருஞ்சில் முள்ளில் சிக்கி சேதாரமாகிறது.ஏதாவது ஒன்றில் நிலைப்பது சரியா, நில்லாது மாறும் குணங்களோடு செல்வது சரியா…எது வெற்றி….!?
இந்த நாட்டில் எதை பின்பற்றி நடப்பது சாமானியன் சார்வது எதை போதனைகள் யாவும் இன்று சோதனை கூடங்களாக…மனிதனின் மனம் நாடும் விஷயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வார்ப்பு பட்டறையில் வார்த்தெடுத்தவையா…?
அவரவர் சூழலில் சந்தித்த நன்மை ,தீமைகளையே போதனை செய்துள்ளார்கள்.அதே போல இக்காலக்கட்டத்தில் நாம் சந்திக்க முடியுமா..?
இச்சமுதாயம் போடும் நாடகத்திற்கே வேஷம் கட்ட வேண்டியுள்ளது…!
இதுதான் நாகரீக கலாச்சாரம் என்று எதை தீர்மானிக்கிறார்கள்…?
நல்ல உழைப்பை தந்து ஊதியத்திற்கு கையேந்துகிறானே பாமரன்…
அந்த உதவாக்கரை, முதலாளியிடமா…?
அல்லது, பல தொழிலாளிகளை
நம்பி தன்னில் இருந்த மூலதனத்தை
இழந்து பலிகிடா ஆகிறானே..!
இதுபோன்ற அட்டைப்பூச்சி தொழிலாளிகளிடமா.
நாகரீக கலாச்சாரம்…
இதில் எங்குப் பிறக்குகிறது…?
இடம்மாறி…தடம்மாறி…தறிக்கெட்டு தன்னலம்,பெரிதென ஆளுக்கொரு …
வட்டம் ஒன்று வரைந்து
கொண்டு அதனுடன் வாழும்
வாழ்க்கை தான் நாகரீகமா…
முன்னேற்றம் என்றால் அடுத்தவனை முடக்குவது தான் நாகரீகமா…?
நாம் நாமாக வாழ முடியாத போது தனிமனித சிந்தனைகள் வெற்றி பெறுமா..?
ஒரே ஒரு கோப்பைக்காக
பலபேர் போராடும் மைதானமாக இதில்,களமிறங்கி தோற்பதே…
இந்நாட்டின் முன்னேற்றமா…?
நம்கலாச்சார மேம்பாடு என்றால்… உன்னால் உருவானதை, உருவாக்குவதை சீர்படுத்தி சேதாரமின்றி வெளிக்காட்டிவதே…!
பிறருக்கு வார்த்தைகளால் மட்டுமே போதிப்பது அல்ல…!
நம் நாட்டில் எத்தனையோ தவசீலர்களும்,மாமேதைகளும் தம் செயலோடு ஒட்டிப்பிறந்தவையே இத்தனை நற்போதனைகளும்,ஆனால் இன்று பேசி திரியும் மதபோதகர்களின் சிந்தனை செயலும் ஒட்டிப்பிறவாத செயலிலந்த முடவாத கூட்டங்களாய் வட்ட மடிக்கிறார்களே…!
இவர்களை பின்பற்றிச் சென்றாலா நம் கலாச்சாரமும் தனிமனித மேம்பாடும் முன்னேற்றம் காணப்போகிறது..?
தனிமனித தடயங்கள்…
சாலையாகவா மாறப்போகிறது.?
ஒவ்வொரு அடிக்கும் தடுமாறும் தடைக்கற்களாக நம் சமுதாய முற்போக்கு சிந்தனையாளர்களின் நாகரீக என்னும் பின்னல் மேடுகளே சாலைகளென இங்கே..பாதையாகிறது.
மதத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் அவரவர் குடும்பங்களில் மத கோட்பாட்டை வரையறுத்து செயல்படுத்தினாலே
அனைத்து மதங்களும் ஆல்போல் தழைக்கும்..!இங்கே…
நான் தான் பெரியவன்,
நீ தான் சிறியவன், என்பது
எல்லாம் அடுத்தவனுக்கு
சொல்லிக்காட்டி திரிவதல்ல…
அவரவர் வழியில்…
அவரவர் பயணம்…
சேதாரமின்றி போய் சேர்ந்தாலே
அதுதான் கலாச்சார மேம்பாட்டின் கண்ணியமாக இருக்கும்.
எதிர்வரும் மனித உணர்வுகளுக்கு
எடுத்துச் சொல்லும் பாலபாடாமாக உன் வாழ்க்கை தடயங்கள் நிலை பெறட்டும்.இதுவே நாம் தினம்..தினம் மனனம் செய்யும் போதனையாகட்டும். அடுத்தவரின் மகிழ்ச்சியில் தான் நம்முடைய வாழ்வின் சிறப்பே மேன்மை அடைகிறது…
என்பதை நினைவில் கொண்டு நம் நித்ய பயணத்தை தொடர்வோம்….!!

எழுதியவர் : Anbuselvan (14-Mar-13, 2:27 pm)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 148

சிறந்த கட்டுரைகள்

மேலே