உனக்காக மட்டும்

காற்றை சுவாசித்ததை விட உன்
காதலை யாசித்ததுதான் அதிகம்
காதலின் பரிபாசனை தெரியாது எனக்கு
தொலைந்து போன என்னை உனக்குள்
தேடிய போதுதான்
காதலின் பரிபாலனம் புரிந்தது எனக்கு
என்
இனியவளே எனக்குள் ஒரு
துடிக்கும் தாஜ்மஹால்
எப்பொழுதும் துடித்து கொண்டிருக்கும்
எப்பொழுதும்
உனக்காக மட்டும்