......மணிமணியாய்........

பொல பொலவென்று பொழுது விடிந்தது...
விறுவிறுவென்று எழுந்தாள் அவள்...
மடமடவென்று வேலையை ஆரம்பித்தாள்...
தகதகவென்று எரியும் அனலை குறைத்து,
சுடச்சுட காப்பி தயாரித்து குடித்தாள்...
குடுகுடுவென்று காய்கறிப் பையை எடுத்து,
கரகரவென்ற குரலில் பேசும் கனகா கடையில்,
பளபளவென்று சில தக்காளி வாங்கினாள்....
சடசடவென்று மழை பெய்யத் தொடங்கியது.
விடுவிடுவென்று வீட்டிற்கு ஓடினாள்..
படபடவென்று முதுகில் தட்டி மகனை எழுப்பினாள்.
சிடுசிடுவென்று கோபத்தை காட்டி எழுந்தான்,
நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அவள் மகன்..
மளமளவென்று வீட்டினுள் புகுந்த மழை நீரை,
பரபரவென்று வெளியே கூட்டித் தள்ளினாள்..
டமார் டமார் என்று இடி இடித்தது.
சிவசிவா என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
வெடவெடவென்று குளிரில் நடுங்கியது தேகம்..
சிலசில சமயங்களில் செந்தமிழில் சிந்து பாட,
சிறுசிறு மணிகளால் கோர்த்து விட்டேன் இக்கவிதையை.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (18-Mar-13, 10:54 am)
பார்வை : 82

மேலே