வயிற்று சிசுவின் வருத்தங்கள்!

அச்சச்சோ!
அம்மா அதை சாப்பிடாதே!
எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது!

அச்சச்சோ அம்மா!
ஜில்லுனு தண்ணி குடிக்கிறியா!
குளிருது அம்மா!

அச்சச்சோ அம்மா!
அப்படி இப்படி திரும்பி படுக்காதேம்மா!
என்னால திரும்பு திரும்பி
நகர முடியல!

அத்தனையும் நீயே செய்துவிட்டு
என்னை பாடாய் படுத்துகிறேன் என்கிறாயே
ஏன் அம்மா?

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (20-Mar-13, 8:43 am)
பார்வை : 131

மேலே