பரவட்டும் தீ...

உறவுகளை கொன்று குவித்து
உணர்வுகளை தின்று கொழுத்து
உயிர்களை துடிதுடிக்க அழித்து
உதிர ஆற்றில் செழித்து
ஆணவத்தில் ஆட்சியமைத்து
நடத்திவரும் அக்கிரமங்கள் எதிர்த்து
நாளும் தொடரட்டும்
நல்வாழ்வின் உரிமைப்போர்
நாம் தொடர்வோம்
நம்மக்களுக்கு நீதிப்போர்
அறிவுத்தீ பற்றட்டும்
அகத்தீ பெருகட்டும்
உணர்ச்சித்தீ செழிக்கட்டும்
உரிமைத்தீ பரவட்டும்

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (20-Mar-13, 10:08 am)
பார்வை : 132

மேலே